மரண அறிவித்தல்

திரு சாம்பசிவசர்மா சண்முகக்குருக்கள் (இளைப்பாறிய முகாமையாளர் கமலா மோடி மண்டபம்)

நல்லுார் வைமன் வீதியைப் பிறப்பிடமகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவசர்மா சண்முகக்குருக்கள் அவர்கள் 22-03-2013 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகக்குருக்கள் சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மூர்த்தி ஐயர் மங்கம்பாள் தம்பதிகளின் மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரதா, மதுசூதனன், பிரகாஷ்(ரவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீரங்கநாத ஐயர், கோமதி, ம்ருதுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிராம், அனந்தராம், மாதவராம், ஷாத்விகா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 26/03/2013, 06:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : No 10, Jane Street, Black Town
கிரியை
திகதி : புதன்கிழமை 27/03/2013
இடம் : No 10, Jane Street, Black Town
தொடர்புகளுக்கு
அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61296369166
சோமசுந்தரசர்மா — இலங்கை
தொலைபேசி : +94212264089