மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி ஆறுமுகம் (இளையதம்பி)

தாவளை , இயற்றாலை, மந்துவில், கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் பத்தன்மோட்டை கண்டாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆறுமுகம் (இளையதம்பி) 27.10.2013 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில இறைபதமடைந்தார்.

இவர் தர்மகர்த்தா பத்தன்மோட்டை முருகன் கோவில் கண்டாவளை, முன்னாள் இணக்கசபை தலைவர், கண்டாவளை ஆகிய பதவிகளை முன்னர் வகித்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும் காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக்கணவரும் சறோஜாதேவி, தேவராசா (தபால் உத்தியோகத்தர் தர்மபுரம்), தவராஜா (லண்டன்), தவராணி (ஆசிரியை, பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), தயாளினி (சுவிஸ்), றாஜினி (லண்டன்), சுபாஸ்கரன் (ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு, பூந்தோட்டம் செய்தியாளர் வலம்புரி), சுபாஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாரஞ்சன், யோகநந்தினி ( ஆசிரியை, பிரமந்தனாறு மகாவித்தியாலயம்), ரஞ்சிதமலர் (லண்டன்), சிவநேசர் (அதிபர், பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), சிவரூபன் (சுவிஸ்), பிரபாகரன் (லண்டன்), கிருஜா (உள சமூக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், வவுனியா), மனோகரன் (சுவிஸ்) ஆகியோரின் பாமிகு மாமனாரும்,

கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, வீரசிங்கம், சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்

எழிலோன், சாம்பவி, பிரணவி, அபிசன், அன்சி, அஜந்த், சஸ்டிகன், அரவிந்தை, பிரியந், சந்யா, யாதவி, கனியவன், அட்சயா, ஆதித்யா, மாதுளா, மகீசன் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16, மதினாநகர் வீதி, மகாறம்பைக்குளம், வவுனியா எனும் முகவரியில் உள்ள மகனின் இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (29.10.13) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்று தகனக்கிரியைகள் பூந்தோட்டம் இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி
தொலைபேசி : 0778862546