மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி தவராஜசிங்கம் (ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்(ES)- மட்டக்களப்பு)
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தவராஜசிங்கம் அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பூரணம்(தாவடி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம்(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணபூபதி(பூபதி- ஓய்வுபெற்ற இலங்கை டெலிகொம் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
தாரிணி(Londis Feltwel), காயத்திரி(முன்னாள் HNB உத்தியோகத்தர்), நிரோஷன்(Tesco) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்சீவ்விஜே, கதிர்ச்செல்வன், திருவருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, கமலாதேவி, சண்முகரத்தினம், மற்றும் சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி இராஜசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், புஸ்பராணி கதிரவேலு(இலங்கை), விமலராணி ரவிந்திரன்(அவுஸ்திரேலியா), தனபாலசுந்தரம் வரதக்ஷினி(ஜெர்மனி), தேவபாலசுந்தரம் நளினி(அவுஸ்திரேலியா), வதனராணி கந்தஞானி(கனடா), சரோஜினிதேவி(கனடா) காலஞ்சென்ற வாமதேவன், முத்துக்குமாரு(கனடா) விமலாதேவி(இலங்கை), பாலேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷோபன், ஷாஸ்வதன், விஷாலினி, சாருனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்