மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி மனோகரதாஸ் (குட்டி மாமா, ராசன்)

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bottrop ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மனோகரதாஸ் அவர்கள் 26-08-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும், கீர்த்திகா, மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மங்கையற்கரசி(கனடா), சன்முகதாஸ்(இலங்கை), அற்புதராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற இளையதம்பி, லிங்கேந்திரராணி, தயாளன், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சின்னராசா,மற்றும் செல்வராசா, குஞ்சுராசா, காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், நவஜீவன், மிதிலா, சஜீவன், திலிபன், டிலானி், லாவன்யா ஆகியோரின் அன்பு மாமாவும், தட்சனன், சிவதாஸ், பபிதா, றஜிதா, றஜிதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்