மரண அறிவித்தல்
திரு சின்னையா துரைராஜா
சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா துரைராஜா அவர்கள் 29-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலன், கீதாஞ்சலி, மைதிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(நடேஸ்- ஆசிரியர்), கந்தசாமி(கிராம சேவையாளர், சமாதான நீதவான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, அனுசியா, லதா, ராமச்சந்திரன்(ராம்), டினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருண், தீரன், நீலன், பிரவீந்த், அபிசேக், ஸ்ரீனா, சியாரா, டிலன், மித்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்