மரண அறிவித்தல்
திரு சிவக்கொழுந்து செல்வமாணிக்கம்

பிறப்பு : 01.03.1932 இறப்பு : 18.03.2015
யாழ். வல்வெட்டித்துறை கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி பெரியகுளம், கொம்மந்தறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்வமாணிக்கம் அவர்கள் 18-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகிருஷ்ணன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சேகரன், ரதீஸ்வரன், முரளிதரன், மற்றும் வதனி, ரஜனீஸ்வரன்(கனடா), குமுதினி(லண்டன்), சபேஷன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைச்சாமி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பற்குணதேவி, துரைராசா, நற்குணம், ராசபூபதி, கௌசலாதேவி, கஜேந்திரராணி, ராஜசுலோசனா, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேணி(லண்டன்), யோகமலர்(லண்டன்), சிவஞானசுந்தரம்(சிவம்), லோகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லையா, கமலறஞ்சிதம், இந்திராணி, காலஞ்சென்ற தம்பிராசா, சர்வானந்தம், துரைராசா, இராசேந்திரம், செல்வானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்