மரண அறிவித்தல்
திரு சிவசுப்பிரமணியம் பாலகுமாரன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பாலகுமாரன் அவர்கள் 23-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் யோகம்மா(நல்லூர் மழவராயர் மாப்பாண முதலியார்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகதாஸ்(நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்னாள் தர்மகர்த்தா, மாப்பாண முதலியார்), மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலினி, சகிலா, மனூஜா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, ஜெயலக்ஷ்மி, விக்னராஜா, மற்றும் வரலட்சுமி(கனடா), யோகலட்சுமி(கனடா), விஜயலட்சுமி(கனடா), இந்திரலட்சுமி(கனடா), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகுமாரன்(Accountant), கிரிதரன்(Vimika Banquets), தினேஷ்வர்(MBA, CGA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம், கருணநாதன், திருஞானசோதி, மற்றும் இராசம்மா(கனடா), தாக்ஷினி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சிவநாதன்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனஞ்ஜெயன், லவன், சுஸ்மித்தா, சமீத்தா, அம்ரித்தா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்