மரண அறிவித்தல்
திரு சிவபாதசுந்தரம் முகுந்தன்

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, வெலிக்கடை மகசீன்சிறைச்சாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் முகுந்தன் அவர்கள் 16-01-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், மனோகரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
மதிவதனி(கொழும்பு), முரளிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஷிகா, சரோன், அஸ்வினி, ஜதீசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியமூர்த்தி(கொழும்பு), சூரியா(கனடா), ஆதி, வித்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகீரதன் மனோரதி, சுதர்சன் மனோரஞ்சினி, ஸ்ரீதர் மாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
உமாஜினி, தர்சிகா, நிதர்ஷன், கீர்த்தனா, அகர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆரியா, அருவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 20-01-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல:465/2 காலிவீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்
குடும்பத்தினர்