மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சிவப்பிரகாசம்
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவப்பிரகாசம் அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று சாவகச்சேரியில் காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தி(சாவகச்சேரி), றஞ்சி(ஜேர்மனி), சீலன்(சிங்கப்பூர்), கௌரி(கொழும்பு), ரவிந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஆங்கில ஆசிரியர்), அரியரட்ணம் மற்றும் மகேஸ்வரன்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமார்(சாவச்சேரி), தியாகராஜா(ஜேர்மனி), சுமதி(யாழ்ப்பாணம்), குகநேசன்(New Medicare hospital – Chavakacheri, சன்ரைஸ் றேடர்ஸ் உரிமையாளர் – சாவகச்சேரி, AMP அம்பிகை களஞ்சியம் – யாழ்ப்பாணம்), குணாளினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருபாதேவி(லண்டன்), சாவித்திரி(பிரான்ஸ்), குகதேவி(சாவகச்சேரி), காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா, அன்னலெட்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெனாஷன், திவ்வியா, கிஷோர், ரமேஷ், சுரேஷ், பிரதாப், துசானா, கானுகா(லண்டன்), மிதுலா(மலேசியா), மிதுலன், வர்சிகா(இந்தியா), கோகிலன், சஞ்சேய், லோஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 12-12-2013 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்