மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் சிவயோகநாதன் (சிவா)

யாழ்.கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt யில் வசித்தவரும், கொக்குவில் மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவயோகநாதன் அவர்கள் 22-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிக்கா, மதூசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, கமலநாதன், மற்றும் சரோஜினிதேவி(யாழ்ப்பாணம்), பத்மலோஜினி(லண்டன்), குகநாதன்(சுவிஸ்), சாவித்திரி(ஹற்றன்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசீலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

பவர்சிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2013 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சந்திரிக்கா(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94774336929
மதூசன்(மகன்) — கனடா
தொலைபேசி : +16479197309
ராஜ்குமார் பத்மலோஜனி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி : +442080907515
குகநாதன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41712232756