மரண அறிவித்தல்,

திரு செபமாலை ஜேசுதாசன்

மானிப்பாய் அன்னம்மாள் கோவிலை பிறப்பிடமாகவும், இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் கதல்பொஸ்கோ என்னும் இடத்தைத் வசிப்பிடமாகக்கொண்ட திரு செபமாலை ஜேசுதாசன் அவர்கள் 30-06-2013 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் வசந்தா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

ரமேஸ் (இத்தாலி), ஜெசிக்கா (கனடா), ஜெனி (இத்தாலி), நிறோ (இத்தாலி), றேகா (இத்தாலி) அவர்களின் அன்புத்தந்தையும்

சர்மிலா (இத்தாலி), ரெட்னகுமார் – எடி (கனடா) யங்கார்லோ (இத்தாலி) அவர்களின் அன்பு மாமனாரும்

தர்ஷனா, பிரதீப் (இத்தாலி) ஜெப்சன், ஜெனிபர், (கனடா) அவர்களின் அன்பு பேரனும்

காலஞ்சென்ற அருட்ககோதரி கார்மேல், காலஞ்சென்ற அன்ரன், காலஞ்சென்ற அருளம்மா, (இலங்கை) ஜேம்ஸ் (இலங்கை), பேபி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

காலஞ்சென்ற பிலோமினா, அருளானந்தம் (அமேரிக்கா) பபா (இலங்கை), காலஞ்சென்ற ராயூ, சஞ்சிதம் (ஜேர்மனி) ஜெறோ (பிரான்ஸ்), சாந்தி (பிரான்ஸ்), பசில் (பிரான்ஸ்), ஜேமலர் (இலங்கை), அருள் (பிரான்ஸ்), அன்ரன் (பிரித்தானியா) அனிற்றா (கனடா) அவர்களின் அன்பு மைத்துணருமாவார்.
இன்னாரின் பூதவுடல் 05-07-2013 அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-07-2013 சனிக்கிழமை 10.20 மணியளவில் பியேவ மொதலோனா தேவாலயத்தில் திருப்பலியின் பின்னர் கதல்பொஸ்கோ சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு
இத்தூலி 0039 3929292560
– மகன் றமேஸ் (ஜோசப்) 0039-3291510646
கனடா – மருமகன் ரட்ணகுமார் – 001 2892405991 , 001 2899961400

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இத்தூலி
தொலைபேசி : 0039 3929292560
மகன் றமேஸ் (ஜோசப்)
தொலைபேசி : 0039-3291510646
கனடா - மருமகன் ரட்ணகுமார் -
தொலைபேசி : 001 2892405991 , 001 2899961400