மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை ஆனந்தராசா (புங்குடுதீவு ப.நோ.கூ.ச முன்னாள் காசாளர், உரிமையாளர்- MPCS கொழும்பு)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2014/05/cnn-300x420.jpg)
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஆனந்தராசா அவர்கள் 01-05-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(பீயோன்) சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரியாம்பாள்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
முருகதாஸ்(Sam), தர்சினி(RBC), மகிழ்தினி(RBC), கிருபதாஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
முகுந்ததாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வத்சலா, உமாராஜ், முகுந்தன், சுதர்சனா(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமனாரும்,
பரமேஸ்வரி, உலகநாயகி, கிருபானந்தன், காலஞ்சென்ற செல்வானந்தன், ராஜேந்திரன்(நெதர்லாந்து), லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஜெயலெட்சுமி, மற்றும் புஸ்பராணி, இராஜேஸ்வரி, சௌந்தரராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிஷான், திரிஷா, அபினயா, கௌதம், துஷானி, கௌரிகா, அவினாஸ், சகானா, ஆதீப் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்