மரண அறிவித்தல்,
திரு செல்லத்துரை கிருஷ்ணபாஸ்கரன் (முன்னாள் எஸ்.கே சூப்பர் மார்கட் உரிமையாளர்)
ஊர்காவற்துறை கரம்பொன் தெற்க்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருஷ்ண பாஸ்கரன் அவர்கள் 28-01-2013 திங்கட்கிழமை அன்று கனடா ரொரன்ரோவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் ஜெகநாதபிள்ளை(வேலணை மேற்கு) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மதுசா, சஞ்சீவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபாம்பாள், கிருபானந்தன்(ஜெர்மனி-கரிகரன் டிரஸ்), கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ண கோபால்(சென் ஜேம்ஸ் ரவுண் வரைட்டி ஸ்டோர்), கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன்(குவாலிடி கன்வீனியன்ஸ்), கிருஷ்ண மாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா, சரஸ்வதி(ஜெர்மனி), காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, கலைசெல்வன், பாலரஞ்சினி, திருநயனி, தேவகாந்தினி, தவராஜா, வளர்மதி, ஜெகதீசன்(ரூபி கேஸ்&கேரி- லண்டன்), சுமதி, கேதீஸ்வரன்(கிருஸ்ணா கேஸ்&கேரி – லண்டன்), சதீஸ்வரன், சுபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராசா(கனடா), சுபாஜினி(லண்டன்), சதானந்தன்(கனடா), பவித்ரா(லண்டன்), லோயினி(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்