மரண அறிவித்தல்
திரு செல்லையா இராசையா (இளைப்பாறிய கணக்காளர்- ஆற்றுப் பள்ளதாக்கு அபிவிருத்தி சபை, மகாவலி)

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், சுதுமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசையா அவர்கள் 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், Dr.சிவசம்பு அம்மாபிள்ளை(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகிருஷ்ணா, இராதாகிருஷ்ணா, காலஞ்சென்ற முரளிகிருஷ்ணா, மீரா(யாழ்ப்பாணம்), ஹரிகிருஷ்ணா(கண்ணன்), யசோதா, சிவகிருஷ்ணா, ஸ்ரீகிருஷ்ணா, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(இராஜி), ஜெயரூபி, விவேகானந்தராஜா(யாழ்ப்பாணம்), கங்காவதி, கமலேந்திரன்(இந்தி), சாந்தா, சசிகலா, ஜெயரூபி(ஜெயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, செல்லம்மா, இராசம்மா, இராசமணி, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, சிந்தாமணி, பத்மநாதன், சின்னத்தம்பி, கணேசபிள்ளை, மற்றும் கிருபாலன்(மல்லாகம்), புஷ்பம்(மலேசியா), தனம்(ஞானம்- சுதுமலை), காலஞ்சென்றவர்களான குணதாசன், லோகதாசன், இரத்தினாவதி, தனபாலன்(அதிபர்- பரியோவான் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரஷாந்த், துஷிதா, கிருஷாந்த், நிரோஷாந்த், கிரிஷாந்தி, பிரியாந்தி, பானுஷன், பிரணவன், ஹரிவதனன், ஹரிகரன், தேனுஜா, அபிநயா, ஜனகன், ஐஸ்வர்யா, பவித்திரா, பிரவீண், ஜனுஷன், ஜெயராம், சௌமியா, ஹரண்யா, சோபிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்