மரண அறிவித்தல்

திரு செல்லையா திருநாவுக்கரசு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் – இலங்கை)

தோற்றம்: 08.06.1932   -   மறைவு: 21.08.2015

யாழ்ப்பாணம் துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் நுணாவில் சாவகச்சேரி, கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா திருநாவுக்கரசு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் – இலங்கை) அவர்கள் 21.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் நல்லம்மாவின் ஆருயிர் கணவரும், காலஞ் சென்றவர்களான செல்லையா, மீனாட்சி ஆகியோரின் அன்பு மகனும்,

கனடாவில் வசிக்கும் தர்மஸ்ரீராஜன் (ராஜன்), தர்மஸ்ரீராணி (ராணி), தமிழ்ச்செல்வன் (செல்வன்), குலறஞ்சினி (றஞ்சோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தி, தேவானந்தா, சந்திராதேவி, உருத்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி, அகிலாண்டம் அவர்களின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி, ருக்குமணி, தங்கரத்தினம், நந்தகோபால், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராசதுரை, அருமைத்துரை ஆகியோரின் மூத்த சகோதரரும்,

தெய்வானைப்பிள்ளை, இந்திராணி, ரஞ்சினி காலஞ் சென்றவர்களான பழனிப்பிள்ளை, ஜெயரட்ணம், குணரட்ணம், விஜயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ் சென்றவர்களான ராமசாமி, நாகம்மா, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நவீனன், தர்ஷிகா, செரீனா, உமேஸ், ரொஷான், தானியா ஆகியோரின் அருமைப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 1810 Albion Road, Etobicoke ontario, Glendal Funeral Home Cemetery இல் 25.08.2015 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,

இறுதிக் கிரியைகள் 26.08.2015 புதன்கிழமை காலை 9 மணிமுதல் 11.30 மணியளவில் இடம்பெற்று பின்னர் தகனக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 25.08.2015 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை
இடம் : 1810 Albion Road, Etobicoke Ontario, Glendal Funeral Home Cemetery
தகனம்
திகதி : 26.08.2015 புதன்கிழமை காலை 9 மணிமுதல் 11.30 மணி
இடம் : 1810 Albion Road, Etobicoke Ontario, Glendal Funeral Home Cemetery
தொடர்புகளுக்கு
ராஜன் (மகன்)
கைப்பேசி : 001 905 872 0613
ராணி (மகள்)
தொலைபேசி : 001 647 525 8556
செல்வன் (மகன்)
தொலைபேசி : 001 416 953 6391
றஞ்சோ (மகள்)
தொலைபேசி : 001 647 830 7542