மரண அறிவித்தல்
திரு செல்வநாயகம் பாலசுப்பிரமணியம்

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்.கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், கடந்த 28 வருடங்கள் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 11-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(ஆச்சி) அவர்களின் அருமைக் கணவரும்,
ரஜினி(கனடா), நெடுஞ்செழியன்(கனடா), ரோகினி(கனடா), நக்கீரன்(செழியன் – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அரியநாயகம், குணரத்தினம், ஜெயலட்சுமி(மங்களம்), மாணிக்கரத்தினம், சங்கீதபூஷணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலேந்திரன்(கனடா), கோகிலா(கனடா), லெனின்(கனடா), ஓகஸ்ரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐங்கரன், லவன், கபிலன், பிரிந்தா, துஷானா, விதுரன், மிலான், பாரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பெறாமக்கள்