மரண அறிவித்தல்

திரு .செல்வராசா ரவீந்திரன்(கிளை முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், சுன்னாகம்)

யாழ். சுன்னாகம் தெற்கு பெரியமதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா ரவீந்திரன் அவர்கள் 21-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கதிரவேலு, பறுவதம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பகாந்தி அவர்களின் அன்புத் துணைவரும்,

லக்‌ஷிகா(மாணவி, தரம்8 கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

கலைச்செல்வி(சுவிஸ்), சுபேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விதுசன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பாலா(சுவிஸ்), அனுஷியா(சுவிஸ்), முருகமூர்த்தி, நாகபூசணி, செல்வராணி, கிருஷ்ணமூர்த்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றக்‌ஷானா(சுவிஸ்), றஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெரியத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பெரியமதவடி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24-06-2015
இடம் : சுன்னாகம் பூவோடை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 94213002016