மரண அறிவித்தல்

திரு செல்வராஜா சாமிநாதன் (சங்கீத ஆசிரியர்)

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி டோர்ட்முண்ட் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சாமிநாதன் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சாமிநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மரிகிரிதா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மநாதன், ஸ்தீபன், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அயூடிக் வசந்தராஜா(ஜேர்மனி), மரின் இராஜலக்சி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தி(ஜேர்மனி), கலைக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரெபானி(ஜேர்மனி), ஸ்ராலின்(ஜேர்மனி), ஸ்ரெபான்(ஜேர்மனி), திவ்யா(இலங்கை), திவாகர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13-02-2013 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியிலிருந்து நண்பகல் 12:00 மணிவரை Hauptfriedhof Am Gottesacker 25, 44143 Dortmund எனும் இடத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

ஓய்வறியா உழைப்பும்
ஒன்றித்த குடும்ப நலனும்
மனையாள் மக்கள்
நட்பின் உயர்வு கண்டு
இசையின் வழியில்
அமுதத்தை தந்து
பல நூறு மாணவரை
பாருக்கு தந்தவரே
பண்பு நிறை ஆசானே,
துயர் களைந்து
மகிழ்வு தந்த மா மனிதரே!
புண்ணிய வாழ்வுதன்னில்
புலம்பெயர் தேசத்தில்
பன்நாடு சென்றும் பைந்தமிழ்!
இசை தந்த இளவலே
எங்கள் வளம் தந்த வள்ளலே
உங்கள் பிரிவால் வாடுகிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அயூடிக் வசந்தராஜா — ஜெர்மனி
தொலைபேசி : +4923153228778
கைப்பேசி : +4917684540008
இலங்கை
தொலைபேசி : +94322220715