மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் தனபாக்கியலட்சுமி (தனம்)

கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் தெற்கை வாழ்விடமாகவும், தற்போது கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தனபாக்கியலட்சுமி 10-12-2012 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் பூமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(முன்னாள் பட்டினசபை செயலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரநாதன், வரதலட்சுமி(கூட்டுறவுச் சங்கம், ஊர்காவற்றுறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், வியாலாட்சி, முத்தையா, நடராஜா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யமுனா(சுவீஸ்), சுகுணா(றஞ்சி-லண்டன்), சுமதி(விஜி-இலங்கை), உதயகுமார்(சுவீஸ்), சபேசன்(கனடா), றஞ்சிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகானந்தா(சுவீஸ்), குமாரசாமி(லண்டன்), புஸ்பநாதன்(இலங்கை), தவகலா(சுவீஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
விமர்ஷன், சுதர்ஷன்(சுவீஸ்), யதுஷா, துபிகா(லண்டன்), கயானி, தனோஜன்(இலங்கை), டயானி, டனிகா, டஜீனன், டஜித்தா(சுவீஸ்), ஹரிஷன், ஜூனு(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தாய், சகோதரர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்