மரண அறிவித்தல்

திரு .தங்கராஜா அன்பானந்தன்

  -   மறைவு: 30.01.2020

(முன்னாள் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நிறைவேற்று அதிகாரி, பல்கலைக்கழக கல்லூரி, பொதுமுகாமையாளர் – உதயன் பத்திரிகை
Dean of academic affairs – BLC Campus,
செயலாளர்-லயன்ஸ் கழகம், யாழ்ப்பாணம்)

ஓட்டுமடம் வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும். 16/1. ஐயனார் கோயில் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா அன்பானந்தன் கடந்த (30.01.2020) வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கராசா மற்றும் நாகரெத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இலட்சுமணர் – நித்தியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பற்குணதேவியின் (உருத்திரா) அன்புக் கணவரும், குகனேஸ்வரி, உதயேஸ்வரி (பிரான்ஸ்), சுரேந்திரன் (வவுனியா), தயாபரேஸ்வரி (பிரான்ஸ்) சத்தியசீலன் (நியூசிலாந்து), ஜெகதீஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சம்யுதா (லண்டன்), சாம்பவி (பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாக அலுவலகம், வடமாகாணம்), சுவேநிதன் (CDB – Bank), பவித்ரா(மாணவி. இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுரேஸ் (லண்டன்), திவ்யநேஷன் (கல்வி அமைச்சு. வடமாகாணம்) ஆகியோரின் மாமனாரும், சந்தோஷ் (லண்டன்), யதுநயனன் (சென். ஜோன்ஸ் கல்லூரி), சுரபி (லண்டன்), சுபஸ்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆனந்ததேவி (சந்திரா), ஓங்காரமூர்த்தி (முன்னாள் அதிபர், யாழ்.மத்திய கல்லூரி), புவனேந்திரன் (சுவிஸ்), விஜயேந்திரன் (கொக்குவில்), காலஞ்சென்ற செல்வராசா (நயினாதீவு) , சண்முகம் (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி (வவுனியா), குணபாலன் (பிரான்ஸ்), ஜீவான்ஜனா (நியூசிலாந்து),இந்திரஜித் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குலசிங்கம் (கொழும்பு), சரஸ்வதி (கொழும்பு), சத்தியபாமா (சுவிஸ்), மாலினி(கொக்குவில்) ஆகியோரின் சகலனும், துசிதா (வவனியா) இந்துஷா (வவுனியா), திவ்யா (வவுனியா), லதுஷன் (நியூசிலாந்து), சுவீஸ்திகா (நியூசிலாந்து), மிதூர்சிகா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் கிருசாந்தி (லண்டன்), அனுசாந்தி (நியூசிலாந்து) ஆகியோரின் சித்தப்பாவும், காலஞ்சென்ற நாகேஸ்வரன். நந்தாஜினி (கொழும்பு), சயனி, தட்ஷா, விஷ்ணு, திவ்யா, பரிசியா, திவாகர், சுவஸ்திகா,நேத்ரா, ரிஷி (பிரான்ஸ்), சிவலக் ஷ்மன் (கொழும்பு), தாட்சாயினி,

லக் ஷாயினி (சுவிஸ்), துளசிதா (ஆசிரியை – உரும்பிராய் சந்திரோதயா வித்தியாலம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், கதுசன், டிலக்சன், சதுர்ஜன் ஆகியோரின் பேரனும், காலஞ்சென்ற இராஜேந்திரம் மற்றும் ஞானரஞ்சிதம் (கொக்குவில்), சுந்தரேஸ்வரர், தயாளகுணவதி (கட்டப்பிராய்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
(IN/12424)(11,17)
தகவல்:- குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.02.2020
இடம் : கோம்பயன்மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.
தொலைபேசி : 0212227133
கைப்பேசி : 0777363356/0771471221