மரண அறிவித்தல்,
திரு தணிகாசலம் முருகேசு

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் முருகேசு அவர்கள் 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறன்ரோவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி அவர்களின் அருமைக் கணவரும்,
பிரணவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காசிநாதன், துரைரெத்தினம், நாகலெட்சுமி, மகேஸ்வரன், தேவராசா, வசந்தராசா, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, முத்துலிங்கம், ஈஸ்வரி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, வாமதாசன், ஜெயலட்சுமி, கலாநிதி, குணரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராசா, இந்திராணி, கதிரவேற்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 04-07-2013 வியாழக்கிழமை அன்று கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படு்ம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்