மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை கனகலிங்கம்
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 22/3 பாரதி வீதி நல்லூர் தெற்கில் வசித்தவரும், தற்பொழுது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் 28-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலிங்கம்(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), லோகேஸ்வரி(இலங்கை), சண்முகலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), இராஜேஸ்வரி(லண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லம்மா(லண்டன்), கந்தசாமி(லண்டன்), தம்பிஐயா(இலங்கை), தவமலர்(கனடா), விஜந்தி(இலங்கை), மணிமாலா(லண்டன்), நந்தகுமார்(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வல்லிபுரம் கந்தையா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொறளை ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் 02-05-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 8:00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும், பின்னர் பூதவுடல் பி.ப 2:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்