மரண அறிவித்தல்
திரு தியாகராஜா வல்லிபுரம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வல்லிபுரம் 01-10-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புட்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவி(அமெரிக்கா), ஜீவிதன், ஆனந்தன், ஜீவனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமந்திரன்(அமெரிக்கா), அருள்ராஜ், றொமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சுகம்(அவுஸ்திரேலியா), சிவானந்தம்(இலங்கை), இராசேந்திரம்(சிங்கபூர்), இந்திராணி(கனடா), புஷ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமலிங்கம்(அவுஸ்திரேலியா), விமலதேவி(இலங்கை), பரிமளகாந்தி(சிங்கபூர்), குணரத்தினம்(கனடா), மயில்வாகனம்(லண்டன்), தவஞானி(மலேசியா), காலஞ்சென்ற பாக்கியம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), அகிலாண்டேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற சின்னத்தம்பி(மலேசியா), காலஞ்சென்ற சுப்பையா(இலங்கை), அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலன், டிலானி, அரன், ஆர்வின்ட், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்