மரண அறிவித்தல்
திரு தில்லையம்பலம் பாலசிங்கம் (இளைப்பாறிய கிராம சேவையாளா்- நயினாதீவு, புங்குடுதீவு)

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், தில்லையம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம்(ஆசிரியர்), காமாட்சி, பரநிருபசிங்கம்(பிரபல வர்த்தகர்), ரெத்தினம், தம்பிராசா(நாராணியர் தபால் ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலெட்சுமி(ஆசிரியை), தம்பிராசா(எழுதுவினைஞர்), மற்றும் மீனாட்சி, காலஞ்சென்ற வர்ணமணி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லீலாவதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
குகபாலன், குகரூபன், பாலகௌரி, அசோக்குமார், குகநேசன், வரதகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா, சுரேந்தினி, சிவலிங்கம், சசிரேகா, சிந்துஜா, துஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரண்யா, சபீசன், அபிராமி, கஷியந்தன், நேசிகா, பிரியங்கா, சிந்துஜன், நிரேஸ், தக்ஷனா, நிதுஜன், அபினஜா, அக்சயா, கிருத்திக், சபரீஸ், சபனாஸ், அபிசன், வர்ணிக்கா, அதுசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்