மரண அறிவித்தல்

திரு தேவராஜன் சம்பந்தன் (ராஜன்)

கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா WINNIPEG ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜன் சம்பந்தன் அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தன் – இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கா, சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரகுப்தன், பிரகாசினி, ரவீந்திரன்(றகு), சங்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சுசரீடா(ரீற்றா), வரதன், கமலா, சுரேக்கா, ஈஸ்வரதாஸ், சத்தியதாஸ் ஆகியோரின் மைத்துனரும்,

ஆரபி, பிரணவனின் அருமை மாமாவும்,

பிரியங்கா, விகிர்தன், கௌதமன் ஆகியோரின் சித்தப்பாவும்,

மிதுலா, விதுரனின் பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான காந்திநாயகம், பொன்னம்பலம், சுந்தரலிங்கம், பரமேஸ்வரி மற்றும் தடாதகைப் பிராட்டியார்(விமலா), பஞ்சலிங்கம், இராமலிங்கம், தணிகாசலம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று WINNIPEG இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சம்பந்தன் குடும்பம்(கொக்குவில்), கைலாசபிள்ளை குடும்பம்(சாவகச்சேரி)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுகந்தினி — கனடா
தொலைபேசி : +12042557396
சங்கரன் — கனடா
தொலைபேசி : +12042571361
ரவீந்திரன்(றகு) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி : +19543447178
பிரகாசினி / குப்தன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி : +19543459197