மரண அறிவித்தல்
திரு நமச்சிவாயம் பரமலிங்கம் (ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்- தேசிய சேமிப்பு வங்கி)
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், பருத்தித்துறை சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட நமச்சிவாயம் பரமலிங்கம் அவர்கள் 20-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நமச்சிவாயம் தம்பதிகளின் அன்பு மகனும், அம்பலம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா(ஜெர்மனி), தஜேந்திரா, ராஜேந்திரா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோன்மணி(கனடா), வள்ளியம்மை(கனடா), பராசக்தி(கனடா), லட்சுமி(இலங்கை), பசுபதி(கனடா), காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், கந்தையா, லிங்கம், கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஸ்கரன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுதாகரன், நேமிநாதன்(ஜெர்மனி), நந்தினி(இந்தியா), சிவாநந்தன்(பிரித்தானியா), சத்தியவாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஷன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி,பிள்ளைகள்