மரண அறிவித்தல்
திரு. நல்லசேகரம்பிள்ளை பரமசாமி

சரசாலை வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லசேகரம்பிள்ளை பரமசாமி நேற்று (14.07.2016) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லசேகரம்பிள்ளை – சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா – செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்தின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் மங்களேஸ்வரி, நாகேஸ்வரி, உதயகுமாரி (ஆசிரியை), விஜயகுமார் (அதிபர்), நாகபுலேந்திரன், சாந்தகுமாரி, புவனகுமாரி (கனடா), நவனகுமாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அனபுத் தந்தையாரும்,
மார்க்கண்டு, திருஞானசம்பந்தர் (இளைப்பாறிய ப.நோ.கூ.ச. முகாமையாளர்), சதானந்தம், பாலசுந்தரம் (ஓய்வு பெற்ற அதிபர்), ஸ்ரீபாஸ்கரன், கமலவதனா, சிவகுமாரன், தேவமனோகரன் (கனடா), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயசூரியன், காயத்திரி (லண்டன்), றஜிதா, ஜெயந்தன் (லண்டன்), காலஞ்சென்ற விபிசன் மற்றும் ஆரணி, வைஷ்ணவி, தனுஜன், தேனுகா (கனடா), அபிசனா, பூமிகா (கனடா), மதுரா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அபிலாஷ் (லண்டன்), அகசரா, அபிசரன், அக்சயா, அபூா்வன் ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (17.07.2016) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொம்பிக்குளம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்