மரண அறிவித்தல்,

திரு நல்லதம்பி வினாயகமூர்த்தி (முன்னாள் காகித ஆலை ஊழியர்)

மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை கறுவாக்கேணியை வசிப்பிடமாகவும், இறுதியாக கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகக் கொண்ட நல்லதம்பி வினாயகமூர்த்தி அவர்கள் 04-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று ரொரன்ரோவில் காலமானார்.

அன்னார், நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சண்முகராசா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்குமார், அகலியா, லக்சாயினி, பிரியதர்சினி, ரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரன், சந்திரலேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவமணி ஓவியம், ராணிமலர், குமாரகுலசிங்கம், வரலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிசா, அபிசன், ஜெசானிகா, ஜெசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 09/12/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home,‎8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 10/12/2012, 08:30 மு.ப — 09:30 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home,‎8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : திங்கட்கிழமை 10/12/2012, 09:30 மு.ப
இடம் : lgin Mills Crematorium, 1591 Elgin Mills Road,Richmond Hill
தொடர்புகளுக்கு
சதீஸ் — இலங்கை தொலைபேசி: +94652257071
தொலைபேசி : +94652257071
ஈசன் — கனடா
கைப்பேசி : +14167289626
தட்சா — கனடா
கைப்பேசி : +16479248873
புஸ்பராணி — கனடா
தொலைபேசி : +19054777955