மரண அறிவித்தல்
திரு நாகப்பர் சிவகொழுந்து
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வசிப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகப்பர் சிவகொழுந்து அவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகப்பர், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
இரத்தினம்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஸ்வரி(மஞ்சு), கமலேஸ்வரி(சஞ்சு), வேணு, காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பூரணம் மற்றும் இரத்தினம் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தப்பு, காலஞ்சென்ற கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லினோஜா, யதுஷன், ஆருஜன், பைரவி, ராகவி, அக்ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 16-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

