மரண அறிவித்தல்
திரு நாகரெத்தினம் கேகலிங்கம் (chief clerk cinemas limited, கலைக்குவியல் நாடகமன்ற ஸ்தாபகர்)

யாழ். கல்வியம்பதி இலங்கைநாயகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரெத்தினம் கேகலிங்கம் அவர்கள் 22-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் ஏக புத்திரனும், கனகசபை மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாட்சி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கமலலிங்கம், இதயலிங்கம், உருத்திரலிங்கம், நர்த்தனலிங்கம், ஜெயந்தி, லைலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீரஞ்சினி, மதிவதனி, ஷாமினி, சுரேஷ், மனோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அரசரெத்தினம்(தினபதி பத்திரிகை), கனகராஜன், காலஞ்சென்ற கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைரமுத்து, மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்