மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் ஆறுமுகம்

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 06-08-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், வைத்திலிங்கம் இராசம்மா(கரம்பன் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பத்மாவதி, கனடாவில் வசிப்பவர்களான பாலேந்திரன், ரவீந்திரன், ராதாம்பாள், கஜேந்திரன், சுரேந்திரன், சசீந்திரன், நரேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகரத்தினம்மா, நடராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சௌந்தரநாயகி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவரஞ்சனி, யோகா, பாலச்சந்திரன், நிர்மலா, கனகா, சுகி, சுபத்திரா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, வேந்தனார், லஷ்மி, மற்றும் நளாயினி(இலங்கை), கனடாவில் வசிப்பவர்களான மகேஸ்வரி, பவானி, புனிதவதி, மனோன்மணி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா, இராசையா மற்றும் தியாகராஜா(மலேசியா), பரமலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கனடாவில் வசிக்கும் கோகுலன், அபிரா, நிஷா, விராஜ், மது, ஜீவிதா, வருண், சாரா, மாஷா, கிரன், ரம்யா, வராகி, நமிதா, வரன், பிரியா, ஆதி, ஒளாவை, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தார்