மரண அறிவித்தல்
திரு பிரான்சிஸ் கிறிஸ்ரி வேதநாயகம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் கிறிஸ்ரி வேதநாயகம் அவர்கள் 22-11-2014 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ், றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெனோவா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தன்(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), நிறோஜன்(பிரான்ஸ்), தனுஷா(பிரான்ஸ்), சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியநாயகம்(கனடா), இராஜநாயகம்(கனடா), பொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், யூடி, சிறோமி, அன்ரன் சுரேஸ், தசாயினி, சான்சிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரன்(பிரான்ஸ்), இந்திரன்(டென்மார்க்), றஞ்சிதன்(டென்மார்க்), புளோறின்(டென்மார்க்), ரவி(டென்மார்க்), சுவேந்திரன்(பிரான்ஸ்), குனேந்திரன்(டென்மார்க்), செல்வன்(டென்மார்க்), குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அக்ஷனா, ஜெனிஸ்கா, அன்ரீனா, றித்தேஸ், றிசேக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்