மரண அறிவித்தல்
திரு பெரியநாயகம் சூசைப்பிள்ளை (பேரின்பம்)

யாழ்ப்பாணம் இளவாலையைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், 1990 ஆண்டு முதல் கனடா றொறான்டோவை வாழ்விடமாகவும் கொண்ட பெரியநாயகம் சூசைப்பிள்ளை அவர்கள் 82 வது வயதில் மறைந்த செய்தியை மிகவும் துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களாகிய திரு.சந்தியாபிள்ளை சூசைப்பிள்ளை மரியாபிள்ளை(தங்கம்மா) அவர்களின் அருமை மகனும்,
அவரது 50 வருடகால குடும்ப வாழ்க்கையின் பின் பிரிவினால் வருந்துகிறார் அவரது அன்பு மனைவி மேரி மக்டலீன் யோகவதி(திருச்செல்வம் அவர்களின் மகள்),
காலஞ்சென்ற திரு.சௌந்தர நாயகம், திருமதி.ஆன்கிறேஸ் சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற திருமதி.தேவரத்தினம்(பேபி) நவரத்தினம், திரு.அரியநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
அவரது பிரிவு துயரினால் வருந்தும் பிள்ளைகளான திரு.அன்றன் ஜயேந்திரன் – மொறீன், திருமதி.அமலா ஜோசபீன் – நோயெல் அப்புத்துரை, திரு.அல்ஸ்டன் கஜேந்திரன் – ஷாமினா, திரு.ஜோஸேப் விஜேந்திரன் – வஸந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வருந்தும் பேரப்பிள்ளைகளான ஜோன், கிறெகறி, ஸமந்தா, அமண்டா, அண்ட்றியா, அன்ட்று, ஸோன், எட்வேட், நிக்கோல் ஆகியோரின் பேரனும் ஆவார்.
காலஞ்சென்ற பெரியநாயகம் சூசைப்பிள்ளை அவர்கள் உற்றார், உறவினர் மேல் அளப்பரிய அன்பும், பாசமும் கொண்டிருந்தார்.
தயவுசெய்து மலர் வளையங்களுக்கு பதிலாக இளவாலை புனித அன்னம்மாள் தேவாலய Grohoo புனரமைப்பு நிதிக்கு நன்கொடைகளை செலுத்தும் படி பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கு பின்னர் Monte Cassino, 3710 Chesswood Drive Downsvieus Ontario எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்