கண்ணீர் காணிக்கை

திரு. பொன்னுத்துரை பாலகிருஷ்ணன் (பாலா அண்ணை)

  -   மறைவு: 31.07.2017

திரு. பொன்னுத்துரை பாலகிருஷ்ணன் (பாலா அண்ணை)

(முன்னைநாள் அரச சார்பற்ற நிறுவனங்களின்  இணையத்தின்  நிர்வாக உத்தியோகத்தர், முன்னைநாள் UNHCR  திட்ட அலுவலர் )

1990ம் ஆண்டு ஏற்பட்ட பல இடப்பெயர்வுகளில்  அரச சார்பற்ற  நிறுவனங்களையும் அரச  நிர்வாகத்தையும் இணைத்து இடம் பெயர்ந்த மக்களது துயரங்களை  துடைப்பதில்  அயராது உழைத்தவரும்,

1995 இன் பின்னர் இடப்பெயர்வுகள் , மீள்குடியேற்றங்கள் , சுனாமி அனர்த்த காலங்களிலும் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்  பின்னர் வன்னியிலிருந்து யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்காகவும் அளப்பரிய சேவை புரிந்த மனிதருள் மாணிக்கம் 31.07.2017 இயற்கை  எய்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் மிகுந்திருந்த 1990 கால கட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களது  நிவாரணப் பணிகளுக்காக  யேர்மன் சமஷ்டிக் குடியரசின் 300 மில்லியன் DM  நிதியை உள்ளூர்  அரச சார்பற்ற  நிறுவனங்களின்  இணையத்தின் ஊடாக  சர்வதேச  நிறுவனங்கள்  மாவட்ட  அரச நிர்வாகத்துடன்  இனைந்து செயல்பட்டு  இடம் பெயர்ந்த மக்களது நெருக்கடியை தீர்த்தமை.

1991  இல் உணவுப் பொருட்களுக்கு  கடுமையான தட்டுப்பாடிருந்த வேளை CARE  நிறுவனத்தின்  சுழற்சி நிதி மூலம்  உள்ளூர் அரச சார்பற்ற  நிறுவனங்கள்  விசேட  கப்பல் மூலம் கொழும்பிலிருந்து  விவசாய உள்ளீடுகள்  தருவிக்க  தீவிரமாகச் செயற்பட்டு  விவசாய உற்பத்தியை  தொடர வழிவகுத்தமை.

இவரது  பணிகள் 2012 ம் ஆண்டு  வரை  ஒவ்வொரு காலகட்டத்திலும்  பாதிக்கப்பட்ட  குடும்பங்களது நலன் சார்ந்தது.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 02.08.2017
இடம் : கொழும்பு
தொடர்புகளுக்கு
நண்பர்கள்
கைப்பேசி : 0777238686