மரண அறிவித்தல்
திரு மகேஸ்பரன் வரதரட்ணராசா (Foreman Paranthan Chemical Corporation, Srilanka)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்பரன் வரதரட்ணராசா அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரதரட்ணராசா பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷகிலா(பிரித்தானியா), சசிகலா(பிரித்தானியா), சதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தருமநாயகி(இலங்கை), ஸ்ரீதரன்(பிரித்தானியா), குணசீலன்(கனடா), சோபனாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷ்யந்தன்(றீகல் வீடியோ- பிரித்தானியா), சிதம்பரநாதன்(பிரித்தானியா), பவித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குலசிங்கம், மற்றும் செல்வரட்ணம்(பிரித்தானியா), பஞ்சரட்ணம்(பிரித்தானியா), கனகேந்திரன்(பாலா- கனடா), ஜெயமலர்(தேவி- இலங்கை), சந்திரகுமார்(ஜோலா- கனடா), தர்மலிங்கம்(இலங்கை), சாவித்திரிதேவி(பிரித்தானியா), ஜெயபூபதி(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷன்(பிரித்தானியா), அஷாயினி(பிரித்தானியா), நிதுஷன்(பிரித்தானியா), தமஷ்வினி(பிரித்தானியா), தனுஜன்(பிரித்தானியா), தர்மஜன்(பிரித்தானியா), சாருஜன்(கனடா), சரண்யா(கனடா), சஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்