மரண அறிவித்தல்
திரு.மயில்வாகனம் நாகலிங்கம் (முன்னாள் பிரதம நிர்வாகி – மஸ்கெலியா எஸ்டேட்)

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், மஸ்கெலியா, கொழும்பை வதிவிடங்களாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நாகலிங்கம் அவர்கள் கடந்த 28. 5. 2014 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான மயில்வாகனம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலம் சென்றவர்களான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நவரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மருமகனும்,
காலம் சென்ற சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்
இராசகுமார் (கொழும்பு), சிவகுமார் (சிவா-கனடா) ஆகியேரின் பாசமிகு தந்தையும், தெய்வானைப்பிள்ளை, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலம் சென்றவர்களான வீ. சண்முகநாதன், புஸ்பவதி ஆகியோரின் மைத்துனரும்.
இராஜகுமாரி (கொழும்பு), சிவயோகேஸ்வரி (ராசாத்தி – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், அனுஷா குமணன், ரஜீவன், சிவரூபன், சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் அபிநயன், ஆர்த்திகா ஆகியோரின் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01. 06. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தகவல்
பிள்ளைகள்