மரண அறிவித்தல்
திரு மாரிமுத்தாபிள்ளை கணேசபிள்ளை (மகேந்திரா ஸ்ரோர்ஸ் முன்னாள் உரிமையாளர்)

வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்தாபிள்ளை கணேசபிள்ளை அவர்கள் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தாபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், சுந்தரம் மீனாட்சி தம்பதிகளின் பாசமுள்ள மருமகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை(பிள்ளை அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவண்ணன்(லண்டன்), காலஞ்சென்ற ரவிவண்ணன், தர்ஷினி(கனடா), ஜெகவண்ணன்(கனடா), இதயவண்ணன்(கனடா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
வனஜா(லண்டன்), செல்வஞானம்(கனடா), சுபாஜினி(கனடா), சுதர்ஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா, அன்னலெட்சுமி, வேதநாயகி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, வைத்தியலிங்கம், சிவராசா மற்றும் யோகேஸ்வரி, ஞானசூரியன், ஞானாம்பாள், கருணைநாயகி, தங்கவடிவேல், சண்முகவடிவேல், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, அட்ஷயா, மிதுலா, சுவாதி, ஆகாஷ், துளசி, அபித்தா, லகீஷன் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்