மரண அறிவித்தல்

திரு முத்தையா அருந்தவநாதன்- ஓட்டோ சப்ளையர்ஸ் உரிமையாளர் (19, சிறாம்பியடி லேன், ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும் 34/6, செட்டித்தெரு நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா அருந்தவநாதன் 30.11.2015 திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா (யா/நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலய முன்னாள் ஆசிரியர்), நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வரதலக்ஷ்மியின் அன்புக் கணவரும்,

ரவீந்திரநாதன், ஜெகநாதன், ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அனுஷ்யா, ஜெயந்தன், ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவீந்திரன், டயானி, பத்மரமணி, தக்சாயினி ஆகியோரின் அன்பு மாமனும்,

லக்ஷ்மிதா, சூரியா, வித்தியன், உபநயா, லக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03.11.2015 வியாழக்கிழமை மு.ப 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

021 222 2443

34/6 செட்டித் தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 03.11.2015 வியாழக்கிழமை மு.ப 10
இடம் : 34/6 செட்டித் தெரு, நல்லூர், யாழ்ப்பாணம்
தகனம்
திகதி : 03.11.2015 வியாழக்கிழமை
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 222 2443