மரண அறிவித்தல்
திரு முருகப்பர் சபாபதி

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகப்பர் சபாபதி அவர்கள் 27-01-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தியாகராஜா(கனடா), சண்முகராஜா(கனடா), பத்மநாதன்(லண்டன்), சிவமணி(கனடா), தவமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமாராணி(கனடா), பாமினி(கனடா), லோகாம்பிகை(லண்டன்), ஜெயமோகன்(கனடா), செல்வக்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, மீனாட்சி, தெய்வயானை, பார்வதி, விசாலாட்சி, சுப்பிரமணியம், செல்லம்மா, கமலம், கந்தையா, மற்றும் சின்னாச்சி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(மலேசியா), இராசம்மா(புங்குடுதீவு), சிவக்கொழுந்து(கிளிநொச்சி), விசாலாட்சி(அனலைதீவு), கமலாட்சி(நாரந்தனை), கார்த்திகேசு(கொழும்பு), சபாரத்தினம்(யாழ்ப்பாணம்), மற்றும் கந்தையா(கனடா, இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.துஷா அறவணன், சுதாகர், திவாகர், பைரவி, சுபகரி, கீரன், மயூரன், சோபன், சுரேக்கா, கேசவன், கோகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்