மரண அறிவித்தல்

திரு ராஜ்குமார் சண்முகராஜா

யாழ்.உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு நந்தாவிலை வதிவிடமாகவும் கொண்ட ராஜ்குமார் சண்முகராஜா அவர்கள் 02-01-2014 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, ஈஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரநாதன், அன்னலெட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குமரேஸ்வரராஜா, ராஜேஸ்வரி(இலங்கை). குசேலினி(இலங்கை), வரதராஜா(கனடா), ரஜனி(ஜேர்மனி), ஹரிசங்கர்(நோர்வே), கிருபராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரவிகுலராஜன், ஜெயரட்ணம்(இலங்கை), சுபாங்கி(கனடா), குகராஜா(ஜேர்மனி), செல்வரதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா(லண்டன்) அவர்களின் சிறிய தந்தையாரும்,

ஜிஸ்ணு(கனடா), ரொஷான்(நோர்வே), சைலா(நோர்வே) ஆகியோரின் பெரிய தந்தையும்,

செந்தூரன்(கனடா), ஜெயசாந்தி(இலங்கை), ஜெயசந்திரன்(இலங்கை), ஜெயலதா(இலங்கை), அபிரா(ஜேர்மனி), துவாரகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தமிழ் சி என் என் குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்து பல பணிகளை மேற்கொண்டவர் திரு ராஜ்குமார் சண்முகராஜா. இவருடைய மறைவிற்கு தமிழ் சி என் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கிருபராஜா (கிப்பி) — கனடா
தொலைபேசி : +16472873339
ரஜனி — ஜெர்மனி
தொலைபேசி : +49308548963
ராஜேஸ்வரி (ராணி) — இலங்கை
தொலைபேசி : +94112524395