மரண அறிவித்தல்
திரு லோகராஜா தில்லைநாதன் (லோகன்)

யாழ். கலட்டி சீனியர்லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட லோகராஜா தில்லைநாதன் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சிவபாக்கியம்(புங்குடுதீவு 1ம் வட்டாரம்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
Dr. தில்லைநாதன் கனகமணி(புங்குடுதீவு 1ம் வட்டாரம்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கிருபானந்தன்(வர்த்தகர்- பொறளை) கலாதேவி(புங்குடுதீவு 1ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிஷாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கரிசன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காந்தரூபன்(அவுஸ்திரேலியா), யோகநாதன்(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யமுனா(அவுஸ்திரேலியா), பிரதீபன்(கனடா), தர்சினி(கனடா), ஹேமமாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகா(அவுஸ்திரேலியா), ஹரிணி(அவுஸ்திரேலியா), செந்தூரன்(கனடா), சாருஷன்(கனடா), கோகிலன்(கனடா), துவாரகா(கனடா), அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிவேதன்(கனடா), கீர்த்தனன்(கனடா), சங்கவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருள்நேசன், பிரதர்ஷன், சந்திரிகா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அகிலன் (Tamilcnn)