மரண அறிவித்தல்
திரு.வல்லிபுரம் சீவரட்ணம்

கோண்டாவில் கிழக்கு நாராயணன் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சீவரட்ணம் 05.07.2015 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னு -பூரனம் தம்பதியரின் பாசமிகு மருமகனும் மல்லிகாதேவியின் அன்புக் கணவரும் சுஜீவா(கொள்வனவு உத்தியோகத்தர் மாநகரசபை,யாழ்ப்பாணம் )சுமதி(லண்டன்),சதீஸ் (பாதுகாவலர் நல்லூர் பிரதேச சபை),காலஞ்சென்ற ஜேயன் ஆகியோரின் அன்புத் தந்தையும் மோகன்ராஜ்,சசிகுமாரி ,சாலினி ஆகியோரின் மாமனாரும் மெல்ஷா,யனோஜ்,கிருஷன் ,ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 06.07.2015 திங்கட்கிழமை பி.ப 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொட்டிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்
நாராயணன் வீதி,
கோண்டாவில்.