மரண அறிவித்தல்

திரு வஸ்தியாம்பிள்ளை எமிலியானுஸ்ப்பிள்ளை ஆனந்தராசா

தோற்றம்: 26 மார்ச் 1954   -   மறைவு: 27 ஏப்ரல் 2017

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை எமிலியானுஸ்ப்பிள்ளை ஆனந்தராசா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை மேரி மாகிறேட் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன்சகாயராணி(நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களது அன்புக் கணவரும்,

ஜெஸ்லி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பேளி சறோயா, தியாகராசா, நவரெட்டினராஜா, பற்றிக் பாக்கியராசா, மற்றும், ஜொஸ்மின் செல்வராணி, பொன்ராசா, ஜொஸ்சி, பாலராசா, தவராசா, சந்திரா, அரியகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பொன்ராசா, புஸ்பநாதன்(மனேஜர்- சுவிஸ்), ஆரோக்கியநாதர்(உரிமையாளர் வஸ்தியாம்பிள்ளை- வைன் ஸ்ரோர், வவுனியா), ஆரோக்கியமேரி, தேவரம்பை, காலஞ்சென்ற லங்கநாயகி, இராசகிளி, ராணி, றோசு, அருள், திரேசா(அவுஸ்திரேலியா), தேவா(ஜெர்மனி), வீரசிங்கம்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவரெத்தினம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி 01-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சசி, ராஜன்(சுவிஸ்)

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 01-05-2017
இடம் : இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு