மரண அறிவித்தல்
திரு விஜயம் கிருஷ்ணபிள்ளை

பிறப்பு : 14.07.1937 இறப்பு : 14.02.2014
யாழ் துன்னாலை வடக்கு, சந்திரவளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு விஜயம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் மருமகனும், தங்க ரத்தினம் (மலர்) அவர்களின் அருமைக் கணவரும்,
கனடாவில் வசிப்பவர்களாகிய விஜயமலர், விமலேந்திரன், விபுலராஜன், விமலராஜி, விஜயேந்திரன், ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ் சென்றவர்களான சபாரட்ணம் சுப்பிரமணியம், இலட்சுமி மற்றும் துன்னாலையில் வசித்து வருபவருமான கனகம்மா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
திருநாவுக்கரசு (கனடா), பரமேஸ்வரி (இலண்டன்), சரஸ்வதி (இலங்கை), நந்தகோபால் (இலண்டன்) மற்றும் காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, இராசதுரை, அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனடாவில் வசிப்பவர்களாகிய உதயகுமார், காயத்திரி, ஜெயகாந்தன், லக்சிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனன், ஜனனி, விதுன், சுஜானா, சஜே சகான், ஜாஸ்மிதா, வினுசிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.