மரண அறிவித்தல்,
திரு விநாசித்தம்பி குஞ்சிதபாதம் (குஞ்சன்)

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விநாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்கள் 22-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மகனாரும், சண்முகநாதன் பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஜினி, சங்கீதன், பிரபாஜினி, ஜினோஷன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பரிமளம், சந்திரவதனி, ஜெயகௌரி, தேவராணி, ஜெகதாம்பிகை, கலைமதி, ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மகேஸ்வரன், பாலசிங்கம், பகீரதன், கோகுலராஜா, கிருஷ்ணமூர்த்தி, இராசலிங்கம், கேதீஸ்வரி, கண்ணகிதேவி, வசுந்தரன், கருணதாசன், விமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜலிங்கம், ஜனனி, சர்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மங்களேஸ்வரி – செல்வகுமார், காலஞ்சென்ற பாலசாந்தினி, யாழினி – மணிவண்ணன், திவாகரன், ஹரிஹரன், சிந்துஜா – தனேஷ்குமார், கஜநிதி, கபிஷனா, மிருஷிகா – விஜிதரன், ஜெயதர்ஷினி, கிருஷாந்தன், சுஜீவன், திவேதா, கினோஷா, விதுஷனன், கபிஷா, கஜீவன், நிலானி, சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிவானிகா, ஜெனந்திகா, சுஜிர்தன், கிஷான், சர்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்