மரண அறிவித்தல்
திரு விநாசித்தம்பி சுப்பிரமணியம்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 02-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பத்மநாதன்(கனடா), தனபாலன்(கனடா), காலஞ்சென்ற கமலேஸ்வரி, காலஞ்சென்ற அகிலேஸ்வரி மற்றும் குணராணி(நெதர்லாந்து), இந்திரன்(சுவிஸ்), சிவகுமார்(நோர்வே), திரிபுவனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இராமநாதன்(V.R.M) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அ.வே.இளையதம்பி(மனோன்மணி விலாஸ் – மன்னார்), புஸ்பமணி, சபாபதிப்பிள்ளை, நடராசா, சொர்ணம்மா, இளையதம்பி(CTB), சுப்பிரமணியம்(P.M) மற்றும் திருநாவுக்கரசு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரா(கனடா), ஞானசக்தி(கனடா), கனகரெத்தினம்(தமிழீழம்), கலைச்செல்வன்(நெதர்லாந்து), இரஞ்சனாதேவி(சுவிஸ்), விஜயபாரதி(நோர்வே), ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதந்திரன், பிவியா, திவியா, லோகலக்ஷன், திவ்வியா, டிலக்ஷனா, தர்ஷனா, விமல்ராஜ், பிரதீபா, துஷாந்தி, ரெக்கினோ, டயாழினி, றெனேஜா, லிசா, ஜெனகன், மிதுலா, மிதுனன், சிம்மயி, விதுஷன், அனுஷன், லிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷனா, ரெவின், ஆசிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.