90 ஆம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்)

யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன் , கண்ணாடி நாதன்) அவர்களின் 90 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எம் குடும்ப விளக்கு அணைந்த வேளையில் எம் துயர் துடைக்க நேரில் வந்து எமக்கு ஆறுதல் அளித்து தேற்றியோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், அன்னாரின் நிகழ்வில் கலந்து கொண்டோர், பல உதவிகளைச் செய்து எமக்குத் துணையாய் நின்றோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 13-10-2012 சனிக்கிழமை அன்று காலை 11:00 தொடக்கம் மாலை 04:00 மணிவரை லுசர்ன் தமிழ்மன்றத்தில் (Tamilmandram Luzern
Tribschenstrasse 51, 6005 Luzern)எனும் முகவரியில் நடைபெறும்.

இந் நிகழ்வில் தாங்களும் கலந்த கொண்டு அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக் அன்புடன் அழைக்கின்றோம்.

(லுசேர்ன் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து 4 இலக்க பஸ் மூலம் செல்லவும்)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுஜி
தொலைபேசி : 076 615 5102
சிவராமன்
தொலைபேசி : 078 788 68 20
மனோ
தொலைபேசி : 076 310 75 75
அன்பு
தொலைபேசி : 078 260 21 72