மரண அறிவித்தல்

திரு வேலன் முருகேசு

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலன் முருகேசு அவர்கள் (23-08-2016) செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவன் முதலிச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கதிராசி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிபாஸ்கரன்(கனடா), விமலா(சுவிஸ்), விவேகராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சீதேவி(இலங்கை), சிவசோதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன்(சுவிஸ்), வசந்தா(கனடா), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை குணம், காலஞ்சென்ற மாணிக்கம், மற்றும் கந்தையா(கனடா), சின்னையா(இலங்கை), கந்தையா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபீனா, றெமிதா, அபிஷா, பிரவீன், சோபிகா, யஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 29-08-2016
இடம் : ஊரியான் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
விவேகராஜா (மகன்)
தொலைபேசி : 021 720 1816