மரண அறிவித்தல்
திரு வே. கந்தையா நல்லதம்பி (சிவகுரு- சமாதான நீதவான், முன்னாள் வர்த்தகர்- அநுராதபுரம் மாவடி)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்/வவுனிக்குளம் சிவபுரம், மலேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வே. கந்தையா நல்லதம்பி அவர்கள் 03-10-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(அனுமார்) அதிராமிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பஞ்சரெத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
நடேசலிங்கம்(செல்வன்), நடேஸ்வரி(செல்வி), நகுலேஸ்வரி(நகுலா), காலஞ்சென்ற நகுலேஸ்வரன்(அப்பன்), கருணாநிதி(கண்ணன்), தவமலர்(தவா), ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோககல்யாணி(கல்யாணி), கலாதரன்(GTR Radio), யோகேஸ்வரன்(யோகன்), சத்தியபாமா, தேவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(சமாதான நீதவான்), சண்முகநாதியம்மா, குமாரசாமி, சுப்ரமணியம் மற்றும் சின்னம்மா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னதங்கம், காலஞ்சென்ற மணியம்(மலேசியா), காமாட்சி, நாகரத்தினம், கனகேஸ்வரி, பாக்கியம்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருநாவுக்கரசு, மற்றும் சாரதா(மன்னார்), றோசம்மா, இராணி, ராஜேஸ்வரி, இந்திராணி, காலஞ்சென்ற செபமாலை, ராசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற துரைராஜா, விஜயலட்சுமி, காலஞ்சென்ற ஐயாத்துரை, அமிர்தலிங்கம், செல்வராசா, மனோகரன், யோகநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரியந்த், ரஜீவ், சயோனா, பிரியங்கா, ஆருஜன், அபிஷேக், ஸ்ரீராம், நட்சத்திரா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : ஈசன்