மரண அறிவித்தல்

துரைரத்தினம் முரளிகரன் -முரளி- (கியூபெக் மாநிலதமிழ்த் தேசிய செயற்பாட்டுத் தலைமையாளர்)

மொன்றியல் கியூபெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக்களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.

தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி, இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர்.

1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர்ந்து மொன்றியலில் குடியேறியதை அடுத்து, தேசிய ஊடகப் பணியில் தம்மை ஒரு தொண்டராக இணைத்துக் கொண்டார். குறுகிய காலத்தில் அறிவுச்சோலையின் முக்கிய பிரிவுப் பொறுப்பாளராகி, 1999ம் ஆண்டிலிருந்து வேறு துறைகளில் பொறுப்பாளராகி, 2005ம் ஆண்டிலிருந்து இறுதிவரை கியூபெக் மாநிலத்தின் தேசிய செயற்பாட்டுத் தலைமையாளராக ஆத்மசுத்தியுடன் பணியாற்றி வந்தார்.

தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்னும் கொள்கையை இறுகப் பற்றி, இடர்கள் இடையூறுகள் பலவற்றை சந்தித்த வேளையிலும் நேர்ப்பாதையிலிருந்து சற்றும் விலகாது, கொண்ட கொள்கையைப் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விட்டுக்கொடாது, இறுக்கமான கொள்கைப் பிடிமானத்துடன் இயங்கி வந்த கர்ம வீரரான முரளி அவர்களை 49 வயதில் நாம் இழக்க நேர்ந்தது காலத்தின் கொடுமையன்றி வேறன்று. தேசியத்துக்காக இரவும் பகலும் ஓய்வின்றி உழைத்த குடும்பத் தலைவனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி, பாசத்துக்குரிய இரு குழந்தைகள், அவருடன் சேர்ந்து பயணித்த தமிழீழத் தேசிய செயற்பாட்டளர்கள், அவரை நேசித்த உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறுவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

தமிழ்த் தேசிய விடுதலைப் போரில் உயிர்நீத்த உத்தம புனிதர்களில் ஒருவராகிவிட்ட திரு. முரளி அவர்களின் நிறைவான பணிகளை நெஞ்சில் இருத்தி, எங்கள் தூயவணக்கத்தை அவருக்கு அர்ப்பணிக்கின்றோம்.

அன்னாரின் இறுதிச்சடங்கு விபரங்கள் வருமாறு
அன்னாரின் வித்துடல் மொன்றியலில் 55Rue Gince, Saint-Laurent,QC H4N IJ7 என்னும் முகவரியில் அமைந்துள்ள Aeter Funeral Complex இல் ஜனவரி 10ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை, மறுநாள் ஜனவரி 9.00 ம் திகதி காலை மணி தொடக்கம் 11.00 பிற்பகல் மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.இவ் அறிவறிவித்தலை தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தகவல்
கனடியத் தமிழ் சமூகம் (514) 512-8755 ,(514) 605-9870 ,(647) 975-0524

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு